அரசுக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் வேறு வீடு வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இத்தனை வருடங்களாக சென்னை தி.நகரில் உள்ள ஐ.சி.டி காலணியில் நல்லக்கண்ணு வசித்து வந்தார். இந்த வீடு அவருக்கு அரசால் ஒதுக்கப்பட்டது ஆகும். இந்த வீட்டிற்காக அவர் மாதா மாதம் வாடகை கட்டி வந்தார்.
இந்நிலையில், அந்த குடியிருப்பு இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது. எனவே, அங்கு வசித்து வந்தவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் நோட்டீற் கொடுக்கப்பட்டது.
இதையடுது அந்த வீட்டை காலி செய்த ஐயா நல்லக்கண்ணு சென்னை கே.கே. நகரில் குடியுயேறினார். அவருக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் வீட்டை காலி செய்ய வைத்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, தமிழக அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக விளக்கமளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நல்லகண்ணுவுக்கு விரைவில் மாற்று வீடு ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.