தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், பாதுகாப்புகாக 150 கம்பெனி துணை இராணுவப் படையினரை, ஏப்ரல் 16ம் தேதி, தமிழகம் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி கூறிய தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ :
39 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.19 ஆயிரத்து 655 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. சென்ற தேர்தலின் போது 200 கம்பெனி இராணுவம் கோரப்பட்டது. அதில் 140 அனுப்பி வைக்கப்பட்டது.
இம்முறை 200 கம்பெனி இராணுவம் கோரினோம். அதில் 160 கம்பெனி துணை இராணுவம் அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளது.ஏற்கனவே 10 கம்பெனி துணை இராணுவப்படையினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்களை எங்கு பணி அமர்த்துவது குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.