தேர்தலை முன்னிட்டு தனியார் பேருந்து கட்டணம் உயர்வு!

316
தேர்தலை முன்னிட்டு தனியார் பேருந்து கட்டணம் உயர்வு

தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பார்கள். இதை அறிந்த சில தனியார் பேருந்து மற்றும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் தேதியும் அரசு விடுமுறை என்பதால், மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வரும், அதனால் பலரும் சொந்த ஊருக்கு செல்வர்.

இதனை அறிந்த சில தனியார் பேருந்து நிறுவனங்கள், பேருந்து கட்டணத்தை 70 சதவீதம் கூடுதலாக வசூலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால், பொது மக்கள் வாக்களிக்க தங்கள் ஊர்களுக்கு செல்ல, அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், எத்தனை பேருந்துகள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

பாருங்க:  சென்னை வந்தார் பிரதமர் மோடி; பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகம்!