நாடாளுமன்ற தேர்தலில், விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் திமுக கூட்டணியில் இணைந்தார். அவருக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்கியது திமுக.
அதை தொடர்ந்து, திருமாவளவன் புது சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டார். அப்போது உதய சூரியன் சின்னத்திலே போட்டியிட திமுக அணியினர் யோசனை கூறினர். தொடர்ந்து யோசித்து வந்த திருமாவளவன், அவர் கட்சி பொது செயலர் விழுப்புரத்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவித்திருந்தார்.
ஆனால், அவர் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவார் என அறிவித்திருந்தார்.
தேர்தல் ஆணையத்திடம், மோதிரம் சின்னம் கேட்ட நிலையில், அதனை தமிழ்நாடு இளைஞர் கட்சி என்னும் புதிய கட்சிக்கு ஒதுக்கிவிட்டது. பிறகு, வைரம் சின்னம் கேட்டார், அதையும் வேறு கட்சிக்கு ஒதுக்கிய தேர்தல் ஆணையம், திருமாவளவனுக்கு பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இதனால், தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் பானை சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.