Tamilnadu Politics
திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் – வருமான வரித்துறை!
முன்னாள் திமுக அமைச்சர், துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வேலூரில் உள்ள துரைமுருகனின் சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் கல்லூரியில், மக்களவை தேர்தலுக்காக பணம் பட்டுவாடா செய்ய பல கோடி கணக்கான பணத்தை பதுக்கி வைத்திருந்ததை வருமான வரித்துரை கண்டுபிடித்துள்ளது.
துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அதையொட்டி, துரைமுருகன் இப்பகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, வருமான வரித்துறையினர், அவர்களுக்கு சொந்தான வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர்.
துரைமுருகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரி மற்றும் சிமெண்ட் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.அதில், பெட்டிகள் மற்றும் கோணிப்பைகளில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அதனால், வருமான வரித்துறை சோதனை மற்றும் பணம் பறிமுதலால் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.