தினகரன் அதிமுகவில் இணைவார் – மதுரை ஆதினம்!

407

நேற்று மதுரையில் உள்ள மதுரை ஆதினம் மடத்தில், தனது பிறந்தநாளை கொண்டாடிய ஆதினம், அமமுக விரைவில் அதிமுகவில் இணையும் என தெரிவித்தார்.

தினகரன், அதிமுகவில் இணைவதே அவருக்கும் அதிமுகவிற்கும் நல்லது என தெரிவித்தார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் எனவும், தற்போது தினகரன் அக்கட்சியில் இல்லை, ஆனால், விரைவில் இணைவார் என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், தினகரன் இதை மறுத்துள்ளார்.தினகரன் கூறியதாவது :

ஆதினத்தின் கருத்தை நான் ஏற்கனவே மறுத்திருந்தேன், இதலிருந்தே அவர் புரிந்திருக்க வேண்டும் எனவும், ஆனால், அவர் தனது பழைய பணியான தமிழரசு பத்திரிகையின் மக்கள் தொடர்பு அலுவலர் வேலையை இன்னமும் மறக்கவில்லை.எங்களுக்கே தெரியாமல் இணைப்புப் பேச்சு நடப்பதாக அவர் தொடர்ந்து பொய் சொல்வதைப் பார்த்தால், யாருக்கோ ஏஜெண்டாக இருக்கிறார்.

யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.

பாருங்க:  ரஜினிக்கு என் வாழ்த்துக்கள் - அமைச்சர் ஜெயக்குமார்