Tamilnadu Politics
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திமுகவுடன் இணைந்தார்!
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.அமமுக விற்கு செல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென்று நேற்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
பாமக விற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தவர், அமமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அண்ணா அறிவாலயம் வந்த அவர் ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் நாடுளுமன்ற தேர்தலில் என் ஆதரவை திமுகவிற்கு தெரிவித்து கொண்டேன்.மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்தை பாலைவனமாக்கி விட்டது. மோடி சொல்வதை செய்வதற்கு தோப்புகரனம் போட்டு காத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.எழுவர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் உத்திரவிட்டும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றர்.
தமிழக மக்களை, விவசாயிகளை பெரிதும் பாதித்த 8 வழிசாலை விவகாரத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது இந்த அரசு. 8 வழிச்சாலைக்காக வழக்குபோட்டது அன்புமணிதானே?. இப்போது அந்த மக்கள் என்ன நினைப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
ரயில்வே பணிகளில் வட மாநிலத்தவர்களுக்கே வேலை வழங்கப்படுகிறது.
பாஜக சார்பில் ஒரு எம்.பி கூட தமிழகத்தில் வெற்றிபெற கூடாது. அதற்காக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வேன் என்று ஆவேசமாக கூறினார்.