தமிழகம் வருகிறார் ராகுல்

தமிழகம் வருகிறார் ராகுல், ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #GoBackRahul

மத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை ஒட்டி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

அதற்காக, நாகர்கோவிலில் நடக்கவுள்ள பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கவுள்ள கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தமிழகம் வருவதை எதிர்த்து #GoBackRahul என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.தற்போது, ட்விட்டவரில் #GoBackRahul முதல் இடத்தில் உள்ளது.

முன்னதாக, நரேந்திர மோடி தமிழகம் வரும் போது #GoBackModi வைரலானது குறிப்பிடத்தக்கது.