மக்களவை 39 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் மனுதாக்கல் செய்ய இன்று மார்ச் 26 கடைசி நாள்.
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடக்கவுள்ள நிலையில் தேர்தலுக்கான வேட்புமனுவை வேட்பாளர்கள் இன்றுடன் தாக்கல் செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு 608 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 231 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில், நேற்று பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக வேட்பாளர் கனிமொழி, அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் நிறைய வேட்பாளர்கள்,இன்று மனு தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனு பரிசீலனைகள் நாளை நடைபெறுகிறது. மார்ச் 29ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.