தனித்துப் போட்டியிட முடிவு – கிருஷ்ணசாமி அறிவிப்பு

271

சரியான கூட்டணி அமையாவிடில் தனித்துப் போட்டியிட்டு மக்களை சந்திப்போம் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக – காங்கிரஸ் கூட்டணியும், அதிமுக -பாஜக – பாமக கூட்டணிகள் மட்டுமே தற்போது உறுதியாகியுள்ளது. தேமுதிக, கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.

அதேபோல், புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே பாஜகவிற்கு ஆதரவாக கிருஷ்ணசாமி பேசி வந்தார். ஆனாலும், அவருக்கு கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி “ எங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஏற்கவில்லை.

எனவே, தனியாக போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மார்ச் 6ம் தேதிக்குள் சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்வொம். இல்லாவிடில் 12 சட்டமன்ற தொகுதிகள், 20 மக்களவை தொகுதிகள் என தேர்வு செய்து தேர்தலை சந்திப்போம்” என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  கமல்ஹாசன் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது - ஹெச்.ராஜா கண்டுபிடிப்பு