டிடிவி தினகரன் கட்சியில் இணைந்த நடிகர் ரஞ்சித்…

256
டிடிவி தினகரன் கட்சியில் இணைந்த நடிகர் ரஞ்சித்

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித்  டிடிவி தினகரனின் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

பாமக மாநில இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி அக்கட்சியிலிருந்து விலகினார். தற்போது அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து விட்டார். அவரைத் தொடர்ந்து, பாமகவின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து நேற்று ரஞ்சித் விலகினார்.

“கூட்டணி தொடர்பாக தொண்டர்களிடம் கருத்துக் கேட்கவில்லை. மதுவுக்கு எதிராகப் போராடிவிட்டு  மதுக்கடை நடத்துவோரிடம் கூட்டணி வைத்துள்ளனர். மக்களை பாமக ஏமாற்றிவிட்டது.  என்னால் கூஜா தூக்கிக் கொண்டு வாழ முடியாது. அதிமுக அமைச்சர்கள் மீது உழல் புகார்களை கூறிவிட்டு அக்கட்சிக்காக அன்புமணி எப்படி பிரச்சாரம் செய்வார்?”  என ரஞ்சித் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை புதுவையில் டிடிவி தினகரனை சந்தித்த ரஞ்சித் தன்னை அமமுகவில் இணைத்துக்கொண்டார். சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தலைவருடன் இணைந்திருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாருங்க:  தமிழகத்தில் மண்ணைக் கவ்விய பாஜக வேட்பாளர்கள் - விவரம் உள்ளே!