ஜெ. தீபா அதிமுக விற்கு ஆதரவு!

341
ஜெ தீபா அதிமுக விற்கு ஆதரவு

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் விமர்சையாக நடந்து வருகின்றன.கூட்டணி அறிவிப்பு, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது, தேர்தல் அறிக்கை வெளியிட்டது என தேர்தல் ஏற்பாடுகள் விமர்சையாக நடந்து வருகின்றன.

அதன்படி, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனர் மற்றும் பொது செயலாளர் ஜெ.தீபா அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.கடந்த 15ம் தேதி சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொது செயலாளர் தீபா , நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக கூறினார்.

அதோடு, சசிகலா தொடர்பான எந்த கட்சியிலும், எந்த நிலையிலும் கூட்டணி இல்லை என தெரிவித்திருந்தார்.
மேலும், அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினார்.இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தீபா, தொண்டர்களின் விருப்பப்படி அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கிறோம் என கூறினார்.

மேலும் அதிமுக தலைமையில் இருந்து அழைப்பு வந்தால் பரப்புரை மேற்கொள்ளவும் தயார், அதிமுகவுடன் இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக நிர்வாகிகள் எங்கள் ஆதரவை ஏற்கொண்ட பிறகே இப்போது, அறிவிப்பை வெளியிட்டுள்ளோம், அதிமுக வெற்றிக்காக தங்கள் கட்சி தொண்டர்கள் செயல்படுவார்கள் என கூறினார்.

பாருங்க:  நடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கிய பதவி - விரைவில் அறிவிப்பு