சென்னை 2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடு!

310
சென்னை 2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடு

2ம் கட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் விவரம் உள்ளதா என தெரிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 188 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.இதையடுத்து வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பதற்காக இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.

அதில், பெயர் சேர்க்கும் பணிகள், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் நடக்க சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.அதில், 7 லட்சத்து 31 ஆயிர்து 333 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப் பட்டிருந்தது.
இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்தலுக்கு முன் பட்டியலில் இடம்பெறும் என முன்னதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்த அடையாள அட்டையைக் காண்பித்து ஓட்டு போட முடியும். சென்னையில் 38 லட்சத்து 18 ஆயிரத்து 919 வாக்காளர்கள் உள்ள நிலையில் நாளை பட்டியல் வெளியான பிறகு வாக்காளர்கள் எண்ணிக்கை 75 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சிறப்பு முகாம்கள் மூலமாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அட்டை வரத் தாமதாகும் பட்சத்தில் ஓட்டுநர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

பாருங்க:  அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் ஏப்ரல் 17 நடைபெறும்; அதிமுக அறிவிப்பு