கனிமொழியுடன் மோதும் தமிழிசை – தூத்துக்குடி தொகுதியில் பரபரப்பு

249

தூத்துக்குடி தொகுதியை கனிமொழி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் என இருவரும் குறி வைத்துள்ளதால் அந்த தொகுதி ஸ்டார் வேல்யு தொகுதியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடுகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், சுமூக உறவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி களம் இறங்க திட்டமிட்டுள்ளார். அதேபோல், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் தூத்துக்குடியும் இருக்கிறது.

எனவே, ஸ்டார் வேல்யூ உள்ள தொகுதியாக தூத்துக்குடி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  திமுகவை நம்பி பலனில்லை - தினகரனுடன் கூட்டணி அமைக்கும் திருமா?