ஒரு வழியாக தேமுதிக கூட்டணி அறிவிப்பு!

387

மக்களவை தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும் கூட்டணி அறிவித்த நிலையில், தேமுதிக அணியில் இழுபறி நிலவியது. இதனிடையே, நேற்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, மற்றும் அதிமுக தலைவர் ஈ.பி.எஸ், ஒருங்கினைப்பாளர் ஓ.பி.எஸ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூட்டணி அமைப்பதை அதிகார பூர்வமாக அறிவித்தனர்.

மேலும், அதிமுக, தேமுதிகவிற்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதாகவும் அறிவித்து, பின் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தேமுதிக பொருளாளர், பிரேமலதா செய்தியாளர்களின் சந்திப்பின் போது, 2011 ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போன்று, மக்களவை தேர்தலிலும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் என்றும் ‘நாளும் நமதே நாற்பதும் நமதே’ என கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,

அதிமுக-தேமுதிக கூட்டணி உணர்வுபூர்வமான கூட்டணி என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமாக விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெரும் என தெரிவித்தார்.

பாருங்க:  வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் - சத்யபிரத சாகு அறிவிப்பு