மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாள், ஏப்ரல் 18 அரசு பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏழு கட்டமாக தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடக்கவுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ல் நடக்கவுள்ளது.தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், வேட்பு மனு தாக்கல் முடைவடைந்து, மனு பரிசீலனை நடந்து வருகிறது. அதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் பரப்பரப்பான பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றர்.
இதனை தொடர்ந்து தேர்தல் அன்று, எந்த இடையூறும் நேராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அரசு அன்று பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.