உங்களுக்கு ஓட்டு வங்கியே கிடையாது – தேமுதிகவை சீண்டிய ராஜேந்திர பாலாஜி

335
உங்களுக்கு ஓட்டு வங்கியே கிடையாது - தேமுதிகவை சீண்டிய ராஜேந்திர பாலாஜி

தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்தே அதிமுகதான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைக்க அதிமுக முயற்சித்து வருகிறார். ஆனால், பாமகவிற்கு நிகராக தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என தேமுதிக பிடிவாதமாக இருப்பதால் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. ஒருபுறம் திமுக தரப்பும் தேமுதிகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்ததே அதிமுகதான். மரியாதை நிமித்தமாகவே அவர்களை சந்தித்து பேசி வருகிறோம். எதிரில் மதம் கொண்ட யானை வந்தால் கூட சிங்கம் போல் நின்று வென்று காட்டும் திறமை அதிமுகவிடம் உண்டு. நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம்.  தேமுதிகவிற்கு ஓட்டு வங்கியே கிடையாது என அவர் பேசினார்.

பாருங்க:  திமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் : விரைவில் அறிவிப்பு?