Tamilnadu Politics
இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி; பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
மக்களவை தேர்தல் நடக்கப்பெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சார பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் இக்கூட்டம் சரியாக 4 மணியளவில் நடக்கப் பெறவுள்ளது. அ.தி.மு.க கூட்டணி அணிகள் பா.ஜ.க, பா.ம.க, புதிய தமிழகம் கட்சிகள், இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
பிற்பகல் 3.30 மணிக்கு, சென்னை விமான நிலையம் வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிக்காப்டரில் பொதுக்கூட்டம் நடக்கவுள்ள இடத்திற்கு செல்லவிருக்கிறார்.
மேலும், பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும்,சென்னை அடையார் எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியிலுள்ள எம்.ஜி.ஆர் சிலையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவும் உள்ளார்.மேலும், இப்பொதுக்கூட்டத்தில் பாதுக்காப்பு பணிக்காக, 6000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.