இந்திய குடியரசு கட்சி சார்பில் தென் சென்னையில் போட்டியிடுகிறார், பவர்ஸ்டார் சீனிவாசன். அங்கு பிரசாரத்தில் ஈடுப்பட்ட அவர், நான் தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சர் ஆவேன் என தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய பவர்ஸ்டார் :
நான் தென் சென்னையில் போட்டியிடக் காரணம், இந்திய குடியரசுக் கட்சியின் அகில இந்தியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தான். மாநிலத் தலைவர் சூசை முன்னிலையில் கட்சியில் சேர்ந்து துணைத் தலைவராக இருக்கிறேன். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எங்களால் மாற்றம் நிகழும் என்று நம்புகிறோம். கண்டிப்பாக நாங்கள் வெல்ல நிறைய அறிகுறிகள் உள்ளன.
சிவாவின், ‘தமிழ்படம்2’ படத்தில், மத்திய அமைச்சராக நடித்திருந்தேன். அப்போது எனக்கு ஆசை வந்தது. ஒரு படத்தில் முதல்வராக நடித்துள்ளேன், அப்போது, நாம் இதுபோல் நிஜ வாழ்க்கையில் ஆகமாட்டோமா என்ற ஆசை வந்தது. “நடிப்பு மற்றும் அரசியல் என் இரு கண்கள் என தெரிவித்துள்ளார்”.
தற்போது பிராச்சரத்திற்கு, 5 நாட்கள் உள்ளது, ஆனால், எனக்கு ஒரு நாளே போதும், அனைத்து இடத்திற்கும் சுற்று பயணம் மேற்கொள்வேன். தேர்தலில், அமோக வெற்றியும் பெறுவேன். பிராசாரத்நிற்கு அவகாசம் போதவில்லை என்றால், தேர்தல் ஆணையத்திடம், ஒரு மாதம் கேட்டு கோரிக்கை வைப்பேன், கிடைக்கவில்லை என்றால், கேஷ்மிரில் போட்டியிடுவேன், ஏதாவது ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ ஆகிவிடவேண்டியது தான்.இவ்வாறு, அவர் கூறினார்.