Tamilnadu Politics
அமித்ஷா சென்னை பயணம் திடீர் ரத்து ஏன்?
இன்று சென்னை வருவதாக இருந்த அமித்ஷாவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதேபோல், தேமுதிகவும் இந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தது.
அதைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார் என அறிவிக்கப்பட்டது. எனவே, தொகுதி பங்கீட்டை உறுதி செய்வார் எனவும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அவரோடு பியூஸ் கோயலும் வருகிறார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், திடீரென அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், பியூஷ் கோயல் திட்டமிட்டபடி இன்று சென்னை வந்து அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.