Tamilnadu Politics
அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது – உச்சநீதிமன்றம்!
தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. இந்நிலையில் தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியை பதிவு செய்யாமல் எப்படி சின்னம் ஒதுக்குவது என உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்வி எழுப்பினர்.பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க முடியாது எனவும், அமமுகவுக்கு பொதுச்சின்னத்தை ஒதுக்க பரிந்துரைத்த நீதிபதிகள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அ.ம.மு.க வை இன்றே கட்சியாகப் பதிவு செய்ய தயார் என டி.டி.வி தினகரன் தரப்பு வக்கில் வாதாடினார்.
குக்கர் சின்னம் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு பொதுச் சின்னத்தை அ.ம.மு.கவுக்கு ஒதுக்கி உத்தரவிட வேண்டும்” என டி.டி.வி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, தேர்தல் ஆணையம் கட்சியை இன்றே பதிவு செய்தாலும் உடனடியாக சின்னம் கொடுக்க இயலாது எனவும், கன்சியை பதிவு செய்து 30 நட்களுக்கு பிறகே பொது சின்னம் கொடுக்கப்படும் என தெரிவித்தது.