Tamilnadu Politics
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் ஏப்ரல் 17 நடைபெறும்; அதிமுக அறிவிப்பு
சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் விருப்ப மனு வரவேற்க்கப்பட்டு பூர்த்தி செய்த நிலையில், நாளை மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைப்பெறும் என அதிமுக அலுவலகம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில், திருவாரூரில் ஏற்கெனவே விருப்ப மனு பெறப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் ஏப்ரல் 13ம் தேதி விருப்ப மனு பெறப்பட்டது.
இதை தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நாளை (ஏப்ரல் 17) நேர்காணல் நடைப்பெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.
விருப்ப மனு, கட்டண ரசீது உடன் காலை 9.30 மணிக்கு மனு தாக்கல் செய்தவர்கள் வர வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.