அதிமுக புதிய தமிழகம் கட்சியோடு கூட்டணி

அதிமுக கூட்டணியில் “புதிய தமிழகம்” கட்சி

மக்களவை தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக அலுவலகத்தில் துணை முதல்வர் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இருவரும் செய்தியாளரை சந்தித்தனர். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அதிமுக புதிய தமிழகம் கட்சியோடு கூட்டணி அமைக்க உள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் ஆதரவு என அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். மக்களவை தேர்தலில் தேமுதிக உடனான பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது, எந்த இழுபறியும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையில் பா.ஜ.க-5, பா.ம.க-7, புதிய தமிழகம்-1, என்.ஆர் காங்கிரசுக்கு 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தல் பணிகளை முடுக்கியது அதிமுக, கூட்டணியை முடிவு செய்த பிறகு அறிவிக்கப்படும் என தகவல்.

அதிமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் விரைவில் வெளியிடுவர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.