அதிமுக கூட்டணியில் நீட்டிப்பு; தமிழ் மாநில கட்சி இணைந்தது!

358
ஜி.கே.வாசன்

மக்களவை தேர்தலில், அதிமுக உடனான கூட்டணியில் இணைகிறது தமிழ் மாநில கட்சி. இது குறித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் தமிழ் மாநில கட்சி இணைவது குறித்து ஆலோசணை நடத்தப்பட்டது.

ஆலோசணையின் போது, ஜி.கே வாசன் மற்றும் அக்கட்சி மூத்த நிர்வாகிகள் ஞான தேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர் உள்ளிட்டோர், அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக, ஜி.கே வாசன் தமாக கட்சியின் மூத்த நிறுவாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிறகு, அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தை பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன் இன்று காலை அதிமுக உடனான கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

பாருங்க:  கௌதமி வீட்டுக்குப் பதிலாக கமல் வீட்டில் ஒட்டப்பட்டதா ஸ்டிக்கர் ? மாநகராட்சி தரப்பு விளக்கம்!