அதிமுகவுடன் ஏன் கூட்டணி? -அன்புமணி ராமதாஸ் விளக்கம்

350

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே அதிமுக மற்றும் திமுகவை பாமக கடுமையாக விமர்சித்து வந்தது. இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தவறு செய்து விட்டோம். இனிமேல், எந்த காலத்திலும் அதிமுக, திமுகவோடு கூட்டணி அமைக்க மாட்டோம் என மருத்துவர் ராமதாஸும், அன்புமணி ராம்தாஸும் பேசும் மேடைகள் அனைத்திலும் கூறி வந்தனர். இதில் ஒரு படி மேலே சென்று குட்கா ஊழல் உட்பட அதிமுகவின் பல்வேறு ஊழல் குறித்து ஆளுநரிடரிடம் ஊழல் பட்டியலையே அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளிக்க இன்று காலை செய்தியாளர் சந்திப்பை அன்புமணி ராமதாஸ் நடத்தினார். அப்போது “பாமகவின் கொள்கைகளில் எந்த சமரசமும் இல்லை. குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்கட்டும். உண்மை வெளியே வந்தால் முதல் ஆளாக நான் அதிமுகவை எதிர்ப்பேன். கடந்த 3 தேர்தல்களில் பாமக தனித்துப் போட்டியிட்டது. ஆனால்,  மக்கள் வாக்களிக்கவில்லை. எனவே, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்” என விளக்கம் அளித்தார்.

பாருங்க:  விஜயகாந்தை விமர்சித்தவர்கள் இன்று கூட்டணிக்கு அலைகிறார்கள் - விஜயபிரபாகரன் விளாசல்