கொரொனா நோய் தொற்று பரவாமல் தடுக்க, இந்திய அரசு 144 தடையை மேலும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இதனைத்தொடர்ந்து தமிழகத்திலும் மே 3ம் தேதி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மக்கள் யாரும் வீட்டிலிருந்து வரக்கூடாது என்பது அரசின் உத்தரவு. இந்நிலையில் மக்களுக்காக, மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பல்பொருள் வியாபாரிகள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவருக்கு கொரொனா உறுதியாகி உள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு கொரொனா உறுதியானது அடுத்து, 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தில் ஐந்து பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐந்து பேருமே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.