பல ஆண்களுடன் உல்லாசம் – ஏமாற்றி பணம், நகை பறித்த பெண்

387

திருமணம் செய்வதாக கூறி பல ஆண்களுடன் பழகி அவர்களிடமிருந்து பணம், நகை ஆகியவற்றை அபேஸ் செய்த பெண்ணை பற்றிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகேயுள்ள வளையமா தேவி பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவர் பழைய தங்கம் மற்றும் வைர நகைகளை ஏலத்தில் எடுத்து அதை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு இவர் திருமணம் செய்வதற்காக தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்தார்.

அப்போது சென்னையை சேர்ந்த மேகலா என்கிற பெண் அவரை தொடர்பு கொண்டார் திருமணம் குறித்து பேசியுள்ளார். எனவே, அவரிடம் பாலமுருகன் அடிக்கடி பேசி காதலில் விழுந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தன்னை சென்னை வந்து சந்திக்குமாறு மேகலா கூற பாலமுருகனும் சென்னை சென்றுள்ளார். அப்போது, தனது சில பணப்பிரச்சனைகள் இருப்பதாக கூறி பாலமுருகனிடம் மேகலா பணம் கேட்டு வாங்கியுள்ளார். இதுபோல் கடந்த 3 வருடங்களில் நிறைய பணம், நகை, ஆடை என அவரின் மேகலா கறந்துள்ளார்.

இந்நிலையில், மேகலா தனது உறவினர் ஒருவரையே திருமணம் செய்ய இருப்பதாக பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மேகலா பற்றிய தகவலை சேகரித்தார். அதில், அவர் 17 ஆண்களை ஏமாற்றி பணம், நகை பறித்தது தெரியவந்தது. எனவே, அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து போலீசாரிடம் புகார் கொடுக்கும் வேலையில் பாலமுருகன் இறங்கியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

பாருங்க:  பெண் உடை மாற்றுவதை எட்டி பார்த்த நபர் - கணவர் செய்த வெறிச்செயல்