Connect with us

அக்க்ஷய திருதியையான இன்று தங்கத்தின் விலை என்ன? ஒரே ஆண்டில் 1 கிராம் தங்கம் இவ்வளவு ஆய்டுச்சா?

akshaya tritiya

Tamilnadu Local News

அக்க்ஷய திருதியையான இன்று தங்கத்தின் விலை என்ன? ஒரே ஆண்டில் 1 கிராம் தங்கம் இவ்வளவு ஆய்டுச்சா?

அட்சய திருதியை (அக்க்ஷயத்திருதி) – தமிழ் மாதமான சித்திரையில் அமாவாசை நாளை அடுத்த வளர்பிறை நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.

“அட்சய” எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவில் பொருத்தவரை, அட்சயத்திரிதி என்றாலே மக்கள் அதிகமாக கூடுவது என்னவோ நகை கடைகள்தான். அதனால்தான், பல்வேறு நகைக்கடைகளில் அக்க்ஷய திருதியை முன்னிட்டு பல பல தள்ளுபடிகளை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்ற வருடம், தமிழகத்தில் 2019 மே, 7ல் அக்க்ஷய திருதியை வந்தது. அன்று, ஒரு கிராம் தங்கம் 3,022 ரூபாய்க்கும், சவரன், 24 ஆயிரத்து, 176 ரூபாய்க்கும் (ரூ.24,176) விற்பனையானது.

தற்போது, ஊரடங்கால், அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, 1 கிராம் தங்கம், 4,529 ரூபாயாகவும்; சவரன், 36 ஆயிரத்து, 232 ரூபாயாகவும் (ரூ.36,232) உள்ளது. ஓராண்டில் மட்டும், கிராமுக்கு, 1,507 ரூபாயும்; சவரனுக்கு, 12 ஆயிரத்து, 56 ரூபாயும் அதிகரித்துள்ளது(ரூ.12,056). இன்று ஏப்ரல் 26ஆம் தேதி 2020யில், அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

பாருங்க:  தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு!

More in Tamilnadu Local News

To Top