உன் பொண்டாட்டி எங்களுக்கும் பொண்டாட்டி – அதிர்ச்சி தரும் திருமண போஸ்டர்

507

ஒரு திருமண விழாவிற்கு மணமக்களை வாழ்த்தி வைக்கப்பட்டுள்ள பேனர் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் திருமண விழாக்களின்போது, ஒரு சிறிய அட்டை கொடுப்பார்கள். அதில் மணமக்களை வாழ்த்தி சில வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு ஒரு சாக்லேட் இணைக்கப்பட்டிருக்கும். தற்போதெல்லாம் மணமக்களை வாழ்த்தி பேனர், போஸ்டர் அடிப்பது பேஷன் ஆக்கிவிட்டது.

அதுவும் வித்தியாசம் என்கிற பெயரில் கண்டபடி வாசகங்கள் அதில் எழுதப்பட்டிருக்கும். சில சமயம் அது எல்லை மீறுவதும் உண்டு. அப்படி எல்லை மீறி வாசகங்கள் எழுத்தப்பட்ட ஒரு திருமண வாழ்த்து போஸ்டர்தான் தற்போது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

அந்த பேனரில் ‘உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி. எங்களுக்கும் தான் பொண்டாட்டி’ என வாசகம் எழுதப்பட்டுள்ளது. இப்படியும் ஒரு போஸ்டரா என்ற கேள்வியோடு இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாருங்க:  இந்தியிலும் க/பெ ரணசிங்கம் ரிலீஸ்