இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரொனாவின் பீதியால், பொருளாதார ரீதியில் பல்வேறு தட்டுப்பாடுகள் நேரிட்டாலும், இந்திய அரசாங்கம் அதை கையாள்வதில் பெரும் யுக்திகளை கொண்டு செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து ஓய்வூதியங்களைப் குறித்து தவறான வதந்திகள் பரவி வருவதை தொடர்ந்து மத்திய அரசு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல்கள் உண்மையானவை அல்ல என்றும், ஓய்வூதியதாரர்களின் நலனை பூர்த்தி செய்வதில் உறுதி பூண்டுள்ளதாகவும், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை குறைக்கவும் மாட்டோம், நிறுத்தவும் மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.