Latest News
பகை மற்றும் விரோதத்தை நீக்கும் வில்லேந்திய முருகன்
பகை மற்றும் விரோதத்தை அகற்றும் வில்லேந்திய முருகர் கடவுள்!!!
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் அமைந்திருப்பது வில் ஏந்திய முருகக் கடவுள் ஆவார் .
இவருக்கு மாதம் ஒருநாள் சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனத்தை காப்பாக அணிவிக்க வேண்டும்.
இவ்வாறு ஆறு முறை செய்து வருவதன் மூலமாக நீண்ட காலமாக இருந்து வந்த பகை படிப்படியாக தீர்ந்து விடும் .
கிழமை என்றால் செவ்வாய்க்கிழமை அன்றும்
திதி என்றால் சஷ்டி திதி அன்றும்
நட்சத்திரம் என்றால் விசாக நட்சத்திரம் அன்றும் கார்த்திகை நட்சத்திரம் அன்றும்
பௌர்ணமி திதி நாட்கள் என்றால் பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் நாட்களிலும்
இவ்வாறு சந்தனக்காப்பு அணிவிக்க வேண்டும். தேனும் தினைமாவும் படையல் வைத்து அதை தானம் தரவேண்டும்.
நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் உண்மையான சந்தன கட்டை தேடி கண்டுபிடித்து உங்கள் கையால் அரைத்து அவருடைய வில்லுக்கும் மட்டுமாவது சந்தன காப்பு அணிவிக்க வேண்டும்.
போலியான மற்றும் கலப்படம் உள்ள சந்தன காப்பு அணிவிப்பது இந்த பலன் கிடைக்காது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இப்படி குறைந்தது 6 முறையும் அதிகபட்சம் அறுபத்தி நான்கு முறையும் செய்து வருவதன் மூலமாக பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள பிணக்குகள், மனஸ்தாபங்கள் தீர்ந்து விடும் .
தொழில் மற்றும் குடும்பத்திலுள்ள குரோதங்கள் ,விரோதங்கள் விலகிவிடும்.
சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9092116990 (வாட்ஸ் அப் மட்டும்)
ராஜபாளையம்.
