இன்று அட்சயதிருதியை நாள். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தங்கம் அதிகம் சேரும் என்பது ஆன்மிக ரீதியாக சொல்லப்படுகிறது.
அட்சய திருதியை அன்று தங்கம் மட்டும் இல்லை, எந்த ஒரு உயர்ரக பொருள் வாங்கினாலும் செல்வ செழிப்பு வரும் என்பது நம்பிக்கை.
பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன் , லட்சுமி தேவியை வணங்கி வரம் பெற்ற தினம் இன்று. இந்த நாளை அட்சய திருதியை ஆக கொண்டாடி வருகிறார்கள்.
அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பல நகைக்கடைகளில் முன்பே முன்பதிவு செய்து இன்று நகை விற்பனை நடைபெற்றது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,816-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,528-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,720-க்கு விற்பனையாகிறது.