கொரொனா வைரஸ் பரவாமல் தடுக்க, வீட்டிலேயே இருங்க என்று இந்திய அரசாங்கம் மக்களிடம் தினந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் ஏதோ விடுமுறை நாட்களை கழிப்பது போல பைக்குகளில் நண்பர்களுடன் ஏறிக்கொண்டு ஊரை வலம் வந்து கொண்டுதான் உள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில், ஏற்கனவே போலீஸார் பல்வேறு மாவட்டங்களில் ட்ரோன் கேமரா மூலம் மக்களை கண்காணித்து வந்தது தெரிந்ததே. இந்நிலையில், திருப்பூர் போலீஸ் செம கிரியேட்டிவிட்டி ஐடியாவில் ஊரை சுற்றிய இளைஞர்களுக்கு கொரொனா குறித்த பயங்கரமான விழிபுணர்வை ஏற்படுத்தி உள்ளனர். ஆம்புலன்சில் கொஞ்சம் ஏறுங்க சார் என்று போலீசார் ஊர் சுற்றிய இளைஞர்களை பார்த்து கூற பின், ஆம்புலன்சில் அந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஏற்றிவிட்டு பின்னனியில் இசையுடன் கூடிய குரலில், என்னை விட்ருங்க, நான் எங்க அம்மாகிட்ட போகணும் என்று அதன் பின் நடக்கும் அட்டகாசங்கள் ஏராளம்.
இறுதியில், போலீஸார் பேசுகையில், இனிமே யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று முடிகின்ற வீடியோ மிகவும் வைரலாகி வருகின்றது. கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்பவர்கள் வாய்விட்டு சிரிக்காமல் இருக்கவே முடியாது.