#curfew Fishes available new annou.
#curfew Fishes available new annou.

லாக் டவுன்ல மீன் சாப்படனும்னு ஆசையா இருக்கா? இதோ வகைவகையா சாப்படலாம்! அமைச்சரின் தகவல்

கொரொனாவின் தாக்கத்தால் இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனை அடுத்து மக்களின் அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதில் இறைச்சிக் கடைகளும், மீன் கடைகளும் கூட உள்ளடங்கும்.

இதனையடுத்து, பெரும்பாலான மக்கள் கடந்த ஒரு மாதமாக காய்கறிகளையும், பழங்களையும் மட்டுமே உண்டு, அரசின் உத்தரவுப்படி வீட்டிலே இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை நாக்கை குஷிப்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இனிமே வகைவகையா, இஷ்டப்படி, நமக்கு புடிச்ச மீன் வகைகளை சமைத்து சாப்பிடலாம். அதுவும் மீன் வீடு தேடி வரும். இதோ மீன்வளத்துறை அமைச்சரின் தகவல்!

அதன்படி, https://meengal.com/find எனும் வலைதளத்தில் அல்லது Meengal என்ற செயலியில் மீன்களை ஆர்டர் செய்தால் நம்ம ஆர்ட்ர் செய்த மீன் வீட்டிற்கே வந்து சேரும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அறிவித்துள்ளார்.