Entertainment
சிவன்மலை முருகன் கோவில் உத்தரவு பெட்டியில் போகர் படம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள முருகன் யாராவது பக்தர் ஒருவரின் கனவில் சென்று ஏதோ ஒரு பொருளை சொல்லி உணர்த்துவார்.
அந்த பொருளை கோவில் அலுவலகத்தில் சொல்லி , பக்தர் சொல்வது உண்மைதானா என்று பூக்கட்டி போட்டு பார்க்கப்பட்டு உத்தரவு கேட்கப்பட்டு பக்தர் சொன்ன பொருள் கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும்.
இதன் மூலம் பெட்டிக்குள் வைத்திருக்கும் அந்த பொருள் மூலம் ஏதாவது நல்ல விசயம் நடக்கும் அல்லது அந்த பெட்டியில் வைத்திருக்கும் பொருள் ரீதியான பாதிப்பு உலகத்துக்கு ஏற்பட இருந்தால் இந்த வழிபாடு அதை தடுக்கும் என்பது நம்பிக்கை.
தற்போது போகர் சித்தரின் படம் வைத்து பூஜிக்கப்படுகிறது. இதனால் உலகில் சித்த மருத்துவம், விஞ்ஞானரீதியான விசயங்கள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
