Latest News
எஸ்.ஐ கொலை வழக்கில் சிறுவர்கள் கைது
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த எஸ்.எஸ் ஐ பூமிநாதன் இவர் ஆடு திருடர்களை பிடிக்க சென்றபோது ஆடு திருட்டு கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை சென்ற இந்த விசயம் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதற்கு இரண்டு டி.எஸ்.பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் ஆடு திருடியவர்கள் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடுத்த தோகையூரை சேர்ந்த 17 வயது மற்றும் 10 வயது சிறுவன் என தெரிகிறது.
இவர்களை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இருந்தாலும் 10 வயது சிறுவன் கொலையாளியாக பிடிபட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
