tamilnadu
எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இமெயில் அல்லது புகைப்பட வடிவில் அனுப்பலாம்! தமிழ்நாடு மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு !!
தமிழகத்தில் கொரொனா நோயின் தாக்கம் சில நாட்களாக குறைவாக காணப்பட்டு வந்தாலும், இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 1629 ஆக அதிகரிப்பு.
இதனை அடுத்து, 144 தடையால், அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ள கடைகள் மற்றும் அரசு நிறுவனங்களை தவிர்த்து மற்றவை அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக மின்வாரியம் மின் கட்டணம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தாழ்வழுத்த தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் தங்களது மின் இணைப்பின் மின் அளவீட்டினை எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இமெயில் அல்லது புகைப்பட வடிவில் தங்களது மின்இணைப்பு சார்ந்த பிரிவு அலுவலகத்தின் உதவி, இளநிலை பொறியாளருக்கு அனுப்பலாம். www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் முலம் உதவி பொறியாளர் அலுவலக கைப்பேசி, இமெயில் விவரத்தை அறியலாம். மேலும், முந்தைய மாத கட்டணத்தை செலுத்துவது தற்போதைய மின்நுகர்வு அடிப்படையில் கூடுதலாக இருப்பதாக புகார் எழுந்ததுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.