Connect with us

சுவையான ரோட்டுக்கடை காளானை எப்படி வீட்டிலே செய்யலாம்

Entertainment

சுவையான ரோட்டுக்கடை காளானை எப்படி வீட்டிலே செய்யலாம்

மாலை நேரங்களில் சாலையில் செல்லும்போது நமக்கு ஏதாவது காரசாரமாக சாப்பிடவேண்டும் என தோன்றும் .அந்த நேரத்தில் இந்த ரோட்டுக்கடைகளில் தள்ளுவண்டியில் விற்கப்படும் காளானை பார்த்தால் நாம் விட்டுவிட மாட்டோம் ஒரு பிடி பிடித்து விடுவோம்.

இது போல சுவையான காளானை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

காளான் 2 கப்

மைதா – 1 கப்

சோள மாவு – 1/4 கப்

மிளகாய் தூள் – 1 table spoon

கரம் மசாலா – table spoon

உப்பு – தே. அளவு

எண்ணெய்- வறுக்க

வதக்குவதற்கு தேவையான பொருட்கள்

வெங்காயம் – 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

தக்காளி – 2

மஞ்சள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

தனியா தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – சிறிதளவு

சோளமாவு – 1 கப்

முதலில் காளான், முட்டைக்கோஸ் போன்றவைகளை பொடி பொடியாக வெட்டிக்கொள்ளவும் வெட்டியவற்றை சோளமாவு , மைதாமாவு, மிளகாய் தூள்,கரம் மசாலா, உப்பு போன்றவைகளை  தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

பின் ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு இந்த மிக்ஸிங்கை பக்கோடா போல் மொறு மொறு என வறுத்து எடுக்கவும்.

பின் கடாய் வைத்து வதக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். அதில் தக்காளியை அரைத்து அதில் ஊற்ற வேண்டும். பின்பு சோளமாவு சிறிதளவு அதில் சேர்த்து மிக்ஸ் அந்த மசாலாவை கிளற வேண்டும்.

பாருங்க:  கொரோனா தடுப்பூசி பணிகளை நிறுத்திய நிறுவனம்

மசாலா நன்கு மிக்ஸானதும் வறுத்து வைத்துள்ள காளானையும் அதில் சேர்த்து போட்டு புரட்டவும்

அப்படியே காளானை போடாமல் உடைத்து உடைத்து போட்டால்தான் நன்றாக மிக்ஸ் ஆகி வரும்.

பின்பு அப்படியே மசாலாவுடன் அதை எடுத்து வெங்காயம், மல்லி இலை தூவி சாப்பிடவும்.

 

More in Entertainment

To Top