செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து! இனி அறிக்கையில் மட்டுமே தகவல் அளிக்கப்படும்!!

357

கொரொனா தொடர்பான செய்திகளை, தினம்தோறும் நாம் ஊடகங்கள் மூலம் பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில், பத்திரிக்கையாளர்கள் கொரொனா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள பெரும் பங்களித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று 2 செய்தியாளர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சென்னையில் தினகரன் நாளிதழ் ரிப்போர்ட்டர் (24 வயது) ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியானது அடுத்து திருவல்லிக்கேணியில் செய்தியாளர் தங்கிருந்த மேன்சன் பகுதிக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்த வேண்டும். அரசும், அதிகாரிகளும், நேரடி செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று பத்திரிகையாளர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மொத்தமாக செய்தியாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இனி மேல் சுகாதாரத்துறை சார்பில் நட்த்தப்படும் கொரோனா பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து, இனி அறிக்கையில் மட்டுமே தகவல் அளிக்கப்படும் என்ற தகவல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாருங்க:  கோட் சூட்டில் டிப் ஆப் எடப்பாடி பழனிச்சாமி - வைரல் புகைப்படங்கள்
Previous articleகுறையாத கொரோனா தொற்று: மே 7 வரை ஊரடங்கை நீட்டித்த முதல்வர்!
Next articleடாம் & ஜெர்ரி இயக்குனர் மரணம்! சோகத்தில் கார்ட்டூன் ரசிகர்கள்!