இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய அரசாங்கம், அதில் எந்தவித பாராபட்சம் பாரமல் மிகுந்த கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து வெளியே வரக்கூடாது, இருசக்கர வாகனத்தில் இயக்குபவர் மட்டுமே இருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களின் மீது கடும் நடவடிக்கையினை எடுத்துள்ளனர்.
அதன்படி, தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,60,566 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2,19,248 வாகனங்கள் பறிமுதல்; ரூ.1.36 கோடி அபராதம் வசூல்; 2,45,097 வழக்குகள் பதிவு- என தமிழக காவல்துறை சார்பில் விவரங்கள் தரப்பட்டுள்ளது.