மோசடி புகாரில் ஆசிரியர் பகவான் கைது – பள்ளி மாணவ, மாணவிகள் அதிர்ச்சி!

296
மோசடி புகாரில் ஆசிரியர் பகவான் கைது - 01

பள்ளி மாணவ, மாணவிகளின் நன்மதிப்பை பெற்ற ஆசிரியர் பகவானை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பகவான். அவரை வேறு பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை பணியிடமாற்றம் செய்தது. ஆனால், அவரை இந்த பள்ளியிலிருந்து அனுப்பவிட மாட்டோம் என அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் என கதறி அழுத புகைப்படங்கள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர் பகவன் பிரபலங்கள் முதல் பொதுமக்கள் பலரின் பாராட்டையும் பெற்றார்.

 இந்நிலையில், அவரின் வீட்டுக்கு வந்த போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரது மாமா கொடுத்த புகாரின் பேரில் போலீசாரின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மாமாவின் மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக பிரமுகரான பகவானின் மாமா, போலீசாரிடம் பொய் புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. எனினும், ஆசிரியர் பகவானை போலீசார் கைது செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  சீரியல்களை ஒதிக்கி சினிமாக்களை களமிறக்கின்றதா தொலைக்காட்சி சேனல்கள்! அப்போ மக்களுக்கு ஒரே குஷிதான் போங்க!!