கடும் பொருளாதார நெருக்கடியில் பெட்ரோல் விலை மீண்டும் தாறுமாறு உயர்வு

கடும் பொருளாதார நெருக்கடியில் பெட்ரோல் விலை மீண்டும் தாறுமாறு உயர்வு

உலகத்தில் பொருளாதார ரீதியாக ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டும்தான்.

இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படுவதால் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறும்.

இந்தியாவிலும் சிறிது சிறிதாக பெட்ரோல் டீசல் விலை அதிகமாக விற்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது.

அங்கே எந்த பொருளும் கிடைக்காத நிலையில் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் பெட்ரோல் லிட்டருக்கு 84 உயர்ந்து, ரூ 338க்கு விற்கப்படுகிறது.

அது போல் டீசல் விலை 113 அதிகரித்து ரூ 289 விற்கப்படுகிறது. நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.