Entertainment
ஓமிக்ரான் வேகம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
உருமாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் உருமாற்றமான டெல்டா வகை வைரஸும் பல்வேறு நாடுகளுக்கு பரவி மிகபெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் மற்றொரு உருமாற்றம் பெற்ற ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி விட்டது. தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டு அதிவேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் மாறுபாடடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் டெல்டா வைரசை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரிப்பு என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
