tamilnadu
பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் எப்பொழுது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தகவல்!!
இந்தியாவில் கொரொனா பாதிப்பால் அனைத்து மாநிலங்களின் எல்லைகளை லாக்டவுன் செய்தது இந்திய அரசு. மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து இயங்கும் நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து பொது தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் எப்பொழுது? என்று மாணவர்கள் எதிர்நோக்கி இருந்த இந்த தருவாயில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
அதன்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணையை மே 3க்கு பிறகு வெளியிடப்படும் என்றும் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் ஒரு நாள் விடுமுறை இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் பொருத்தவரை கல்வி கட்டணத்தை செலுத்த நிர்பந்தித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.