Connect with us

கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்த ஊழியர் ! சானிட்டைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி!

Corona (Covid-19)

கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்த ஊழியர் ! சானிட்டைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி!

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்த மருத்துவப் பணியாளர் ஒருவர் சானிட்டைசர் குடித்துத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரொனா பாதிப்புக்கு 1075 பேர் ஆளாகியுள்ளனர். இதில் 11 பேர் பலியாகியுள்ள நிலையில் மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரொனா வார்டில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் தான் இனி கொரோனா வார்டில் பணிபுரிய முடியாது என கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு மேல் அதிகாரிகள் மறுத்ததால் மனமுடைந்த அவர் அங்கிருந்த சானிட்டைசரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவருக்கு உடனடியாக மீட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in Corona (Covid-19)

To Top