கடனை தருகிறேன் வா! – பெண்ணை மிரட்டி கற்பழித்த வாலிபர் கைது

248
கடனை தருகிறேன் வா! - பெண்ணை மிரட்டி கற்பழித்த வாலிபர் கைது

வாங்கிய கடனை திருப்பி தருவதாக கூறி பெண்ணை வரவழைத்து மிரட்டி கற்பழித்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானலில் உள்ள ஆனந்தகிரி எனும் பகுதியில் உள்ள காம்பளக்சில் எலக்டிரிக்கல் கடை வைத்தி நடத்தி வருபவர் சசிகுமார். அதே காம்ப்ளக்சில் உள்ள ஒரு கவரிங் கடையில் பணிபுரிந்து வரும் பெண் மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

மாலாவிடம் சசிகுமார் பணம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை மாலா அவரிடம் பலமுறை கேட்டும் அவர் அதை தரவில்லை. சமீபத்தில் தான் வத்தலகுண்டுவில் இருப்பதாகவும், அங்கு வந்தால் பணத்தை தருகிறேன் எனக்கூறியுள்ளார்.

இதை நம்பி எப்படியும் இன்று பணத்தை வாங்கிவிடலாம் எனக்கருத்தி மாலா அங்கு சென்றுள்ளார். தான் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக கூறிய சசிகுமார் மாலாவை அங்கு வரவழைத்துள்ளார்.

அவரின் அறைக்குள் மாலா சென்றதும், அறைக்கதவை தாழிட்டு, அவரை கொண்று விடுவதாக மிரட்டி அவரை கற்பழித்துள்ளார். அதோடு, செல்போனில் மாலாவுக்கு தெரியாமல் அதை வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார்.

மாலா அவரிடம் பணம் கேட்ட நச்சரிக்க, அந்த வீடியோவை காட்டி என்னிடம் பணம் கேட்டால் இந்த வீடியோவை உன் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் காட்டுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாலா அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதைத் தொடர்ந்து சசிகுமாரை கைது செய்த போலீசார் அவரது செல்போனில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அழித்தனர்.

பாருங்க:  கமலுடன் இணைகிறாரா லோகேஷ்