கிருஷ்ணகிரியில் தனது தம்பியுடன் கள்ள உறவு வைத்திருந்த மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாளமப்ட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி கஸ்தூரி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜின் பெற்றோர் அருகில் உள்ள கிராமமான கிட்டம்பட்டியில் கோவிந்திராஜின் சகோதரர் சின்னசாமியுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சின்னசாமிக்கும், கஸ்தூரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து அவ்வப்போது இருவரும் சந்தித்து கோவிந்தராஜுக்கு தெரியாமல் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
ஒருகட்டத்தில் இந்த விவகாரம் கோவிந்தராஜூக்கு தெரியவர கஸ்தூரியை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர் சின்னசாமியுடனான கள்ள உறவை விடவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு எழுந்தது. அப்போது ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், அரிவாளால் கஸ்தூரியை சரமாரியாக வெட்டினார். இதில், கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதற்கு முன்பாகவே கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.