பெண்ணிடம் மர்ம உறுப்பை காட்டி உல்லாசத்துக்கு அழைப்பு – ஏடிஎம் மையத்தில் வாலிபர் அடாவடி!

292

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் ஒரு வாலிபர் தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணிடம் மர்ம உறுப்பை காட்டி உல்லாசத்துக்கு அழைப்பு

கடந்த சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் வெளியே சென்ற ஒரு பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  மணியளவில் ஆட்டோவில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஒட்டுனருக்கு பணம் கொடுப்பதற்காக தனது வீட்டின் அருகே இருந்த ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுக்க முயன்றார். ஆனால், அதில் பணம் இல்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர் ஏடிஎம் மையத்தில் நுழைந்து நான் வேண்டுமானால் ஆட்டோவுக்கு பணம் கொடுக்கிறேன் எனக்கூறியுள்ளார். அவரின் உதவியை மறுத்த அப்பெண் ஆட்டோ ஓட்டுனரிடம் எடிஎம்மில் பணம் இல்லை எனக்கூற ஆட்டோ ஒட்டுனர் சண்டை போட்டுள்ளார். எனவே, அருகிலிருந்து வேறு ஏடிஎம்க்கு அப்பெண் சென்றுள்ளார். இந்த முறையும் உள்ளே வந்த அந்த வாலிபர், அவரின் தோளை பிடித்து உதவி வேண்டுமா? எனக் கேட்க, அவரிடமிருந்து விலகிய பெண், மீண்டும் அவரிடம் உதவியை மறுத்து, ஏடிஎம்-மில் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் தனது பேண்ட் ஜிப்பை கழட்டி தனது மர்ம உறுப்பை வெளியே எடுத்து காட்டியுள்ளார்.

இதை தனது செல்போன் மூலம் வீடீயோ எடுத்து அவரிடம் காட்ட அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த வீடியோவை அந்த வழியாக வந்த போலீசாரிடம் அப்பெண் காட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.

அவரின் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனையை வாங்கித் தருவேன் என அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாருங்க:  நவம்பர் முதல் மெரினா கடற்கரை திறக்க வாய்ப்பு