Latest News
கலைஞர் உணவகம்- பன்னீர்செல்வம் எதிர்ப்பு
அம்மா உணவகம் என்ற பெயரில் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அவர் முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மதியம் சாப்பாடு மிக குறைந்த விலையில் கொடுக்கப்பட்டது. 5 ரூபாயில் மதிய சாப்பாடு கொண்டு வரப்பட்டது. காலை இட்லி மிக குறைந்த விலையிலும் மாலையில் சப்பாத்தி வெறும் 1.50 காசுக்கும் கொடுக்கப்பட்டது.
இந்த திட்டம் மிகுந்த கஷ்டப்படுபவர்களுக்கு உதவியது.. இந்த நிலையில் புதிய திமுக அரசு அமைந்த உடனும் அம்மா உணவகம் எந்த பாதிப்புமில்லாமல் தொடர்ந்தது.
இந்நிலையில் திமுக அமைச்சர் சக்கரபாணி அம்மா உணவகம் போல கலைஞர் உணவகம் 500 அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்வதாகவும் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
