Thanjavur islams helped
Thanjavur islams helped

தஞ்சையில் இஸ்லாமியர்களின் நெகிழ்ச்சி செயல்! அசந்து போன மக்கள்!!

இந்திய அளவில் கொரொனா பாதிப்பால் மாநிலங்களின் எல்லை முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படும் கோயில்கள், கடைகள், கல்வி நிலையங்கள், திரையரங்குகள், என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து, இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் கோவில்களை தவிர்த்து, நகரங்களில் உள்ள சிறுசிறு கோயில்களின் மாத சம்பளத்தை சார்ந்து வாழும் அர்ச்சகர்களின் நிலை கேள்விக்குறியே! இதனை அடுத்து தஞ்சையில் இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயலால் மக்கள் அசந்து போய்யுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒன்றாகத் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் உள்ள கோயில்களும் அடைக்கப்பட்டுள்ளதால், சிறு சிறு கோயிகளின் அர்ச்சகர்கள் வருமானம் ஏதுமின்றி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்லாமிய அமைப்பு சார்பில் சிறிய கோயில் அர்ச்சகர்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.